கொத்தமல்லி சட்னியை தொடர்ந்து உட்கொள்வதால் எந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?.

 
koththamalli koththamalli

பொதுவாக புதினா சட்னி ,பிரண்டை சட்னி ,பூண்டு சட்னி ,வெங்காய சட்னி ,தக்காளி சட்னி ,மற்றும் கருவேப்பிலை சட்னி ,கொத்தமல்லி சட்னி ,போன்ற சட்னிகளை நாம் தொட்டுக்கொண்டு சோறு ,இட்லி தோசை சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியமாய் இருக்கும் .அதற்குள் நாம் இன்று கொத்தமல்லி சட்னி செய்யும் முறைகளையும் அதன் மூலம் நம் உடல் பெரும் ஆரோக்கியம் பற்றியும் பார்க்கலாம்
1.இந்த சட்னிக்கு முதலில்  20 கிராம் பூண்டு, 20 கிராம் புதினா, 10 மில்லி எலுமிச்சை சாறு, 50 கிராம் கொத்தமல்லி (கொத்தமல்லி), 1 பச்சை மிளகாய், சிறிது உப்பு, 15 கிராம் ஆளி விதை எண்ணெயை ஒரு மிகசியில் போட்டு அரைத்து கொள்ளவும் .
2.இப்போது மிக்சி மூடியை திறந்து பார்த்தால்  உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் இயற்கையான கொத்தமல்லி சட்னி ரெடி. இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

koththamalli seeds
3.இந்த சட்னியில் உள்ள கொத்தமல்லியின் பச்சை இலைகள் மற்றும் புதினாவில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும்  குளோரோபில் உள்ளன.
4.இந்த  குளோரோபில் உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
5.இந்த சட்னியில் உள்ள ஏராளமான புரதம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம் உடலை காக்கிறது  
6.இந்த சட்னியில் உள்ள மூலிகைகள் நமக்கு  இதய நோய் அபாயத்தை தானாகவே குறைக்கிறது.