வெள்ளரிக்காயை வேக வைத்து சாப்பிட்டால் எந்த நோய்க்கு நல்லது தெரியுமா ?

 
sugar

பொதுவாக வெள்ளரிக்காயில்   கணையத்தில் இன்சுலின் சுரக்க தேவையான பொருள் உள்ளதால்
சுகர் பேஷண்டுக்கு நன்மை புரியும் ,இதை கொண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஒரு டிஷ் எப்படி தயாரிக்கலாம் என்று இப்பதிவில் நாம்  பாக்கலாம்

1.முதலில் வெள்ளரிக்காயை எடுத்துக்கொண்டு ,அதை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

cucumber
2.பின்னர் ஒரு கப் பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும்.
3.பின்னர் காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
4.அதன் பிறகு வெட்டி வைத்த வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும்.
5.பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து எடுக்கவும்
6.அதன் பிறகு கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்தால் ஆரோக்கியமான வெள்ளரி மசாலா ரெடி