உலர் திராட்சையை பாலில் கலந்து சாப்பிட என்ன நன்மைன்னு தெரிஞ்சிக்கோங்க ..
பொதுவாக உலர் திராட்சை நம் உடலுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் .இந்த உலர் திராட்ச்சையை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பாலில் சேர்த்தோ சாப்பிட்டால் நமக்கு உடல் உறுதியாக இருப்பதோடல்லாமல் நம் ஆரோக்கியமும் சிறப்பாய் இருக்கும் .மேலும் இந்த உலர் திராட்சையின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.திராட்சை தண்ணீரில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அடங்கியுள்ளன
2.திராட்சை தண்ணீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன
3.திராட்சை தண்ணீரில் பசியைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன
4.திராட்சை தண்ணீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளன
5.உலர் திராட்சை நம்முடைய சருமத்தை பளபளப்பாக்கவும், முகப்பரு வராமல் தடுக்க உதவும்,
6., உலர் திராட்சை நம்முடைய முடியை பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வைக்க உதவும்.
7.உலர் திராட்சையில் ஆக்சிஜனேற்ற பண்பு இருப்பதால் பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்து போராட உதவும்.
8.உலர் திராட்சை மலச்சிக்கல் மற்றும் மலத்தை தளர்த்தி இயக்க உதவும், .அது மட்டுமல்லாமல் செரிமானம் மற்றும் இரத்த சோகையை சரிசெய்யும்.
9.திராட்சை தண்ணீரை குடிப்பதால் அதில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக வைக்க உதவும்.
10.திராட்சை தண்ணீர் பெண்களின் எலும்புகள் தேயாமல் பாதுகாக்கும் .
11.உலர் திராட்சையை பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் எடையும் அதிகரிக்கும்