சம்மணமிட்டு சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம்

 
fruits eating tips fruits eating tips

பொதுவாக  நொறுங்க தின்றால் நூறு வயது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் ,எப்படி ஆரோக்கியமாய் வாழ சாப்பிட வேண்டும் என்று நாம் பார்க்கலாம்
1. நாம் உண்ணும் உணவை உமிழ்நீருடன் சேர்த்து நன்றாக மென்று கூழாக்கித்தான் குடலுக்கு அனுப்ப வேண்டும் .
2.அப்போதுதான் குடலில் அந்த உணவு முழுமையாக செரிமானமாகி உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் .
3.மேலும் உணவை மட்டுமல்ல நாம் குடிக்கும் நீரையும் மென்று தின்பது போல் குடிக்க வேண்டும் என்கிறது ஆயுர் வேதம் .
4.பொதுவாக சாப்பிடும் பொழுது காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு சாப்பிடும் பொழுது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.

eating procedure to avoid diseases
5.தொலைக்காட்சி, கைபேசி, மடிக்கணினி போன்றவற்றை சாப்பிடும்போது பயன்படுத்தினால் அந்த உணர்வுகள் நம்மை பாதிக்கும்
6.சாப்பிடும் போது பேசக்கூடாது ஏனென்றால், சாப்பிடும் போது வெளியில் இருந்து காற்று வாய் வழியாக உள்ளே செல்லும் இது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. இதனால் தொப்பை உருவாக வாய்ப்பு உள்ளது.
7.நாம் சாப்பிடும் போது, மனதில் வெறுப்பு, வன்மம், கோபம், மன உளைச்சல் என எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் உணவை மட்டுமே கவனித்து உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிடவேண்டும்.