நாம் நோயில்லாமல் வாழ எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா ?

பொதுவாக பசியில்லாதபோது நாம் சாப்பிட்டால் அது நமக்கு பல்வேறு வயிறு பிரச்சினைகளை உண்டாக்கும் .அதே நேரத்தில் பசி எடுத்தும் சாப்பிடாவிட்டால் வயிற்றில் அமிலம் சுரந்து நமக்கு பல தொல்லைகளை உண்டாக்கும் .அதனால் உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்.
2.வயிறுமுட்ட உண்பதோ , உணவு உண்டபின் உறங்குவதோ கூடாது.
3.தண்ணீரை மென்று தின்னுவதுப்போல ,அதாவது மெதுவாக ரசித்து ருசித்து துளி துளியாக பருக வேண்டும். 4.உணவை குடிக்க வேண்டும் என்பார்கள் அதாவது உணவு வாயில் இருக்கும் போதே கூழாக மென்று உமிழ்நீரோடு பின்பு மெதுவாய் ரசித்து ருசித்து விழுங்க வேண்டும்.
இது போல ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமுண்டு
5.இனிப்பு – தசையை வளர்க்கும்
6. புளிப்பு – தேவையான கொழுப்பை தரும்
7 . உவர்ப்பு – உமிழ் நீரை சுரக்க செய்யும்
8 . கார்ப்பு – எலும்புகளை வலுவாக்கும்
9 . கசப்பு – நரம்புகளை வலுபடுத்தும்
10 . துவர்ப்பு – இரத்தம் சுத்தம் செய்யும்