இந்த பயிற்சிகள் செஞ்சா உங்க கண் கெட்டு போகாமல் பாதுகாக்கலாம்

 
Digital Eye Strain

பொதுவாக  இளம் வயதிலேயே பார்வை கோளாறு ஏற்படாமல் இருக்க சில கண் பயிற்சிகள் உள்ளன . .பின் வரும் கண் பயிற்சிகள் முறையாக பயிற்சி பெற்ற ஒரு நிபுணரால் உங்களுக்கு அறிமுகப்படுத்த படுகிறது .அதை படித்து ,செய்து பார்த்து பயன் பெறுங்கள்
1.இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களில்  சூடு பரவும் வரை தேய்த்து விட்டு , கண்களுக்கு ஓய்வளியுங்கள்.
2. கணினி பயன்பாட்டாளர்கள் கண்களை சீரான முறையில் இமைத்து வந்தால்  நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.

eye
3. கணினியில் வேலை செய்பவர் , 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது, ஏதேனும் தொலைதூர பொருள்களை உற்று நோக்கி பயிற்சி செய்தால் கண்கள் புத்தொளி பெரும்
4.கண்களில் அதிக அழுத்தமோ, எரிச்சலோ உணர்ந்தால், உடனே நன்கு தண்ணீர் ஊற்றி கண்களை கழுவுங்கள்.
5., நீங்களே உங்கள் கண் முன்னே பெரிய எட்டு உள்ளதை போன்று பாவித்துகொள்ளவும் .
6.பின்பு , கண்களாலே எட்டு போட்டு பயிற்சி செய்யுங்கள்.இப்படி செய்தால் கண்கள் நல்ல பார்வை பெரும்
7.இதை முறையாக பயிற்சி செய்தாலே போதும் கண்ணில் கோளாறுகள் உண்டாகாது