குழந்தைகள் தயிர் சாப்பிட்டால் என்ன ஆரோக்கியம் உண்டாகும் தெரியுமா ?
பொதுவாக பிள்ளைகள் வயதிற்கேற்ற உயரத்துடனும் ,ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் .அதற்காக அவர்கள் சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும் .மேலும் உயரமாக என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.ஒரு குழந்தை வயதிற்கேற்ற உயரத்துடனும் ,ஆரோக்கியமாகவும் இல்லையென்றால் அது அவர்களின் எதிர் கால வாழ்வை வீணாக்கி விடும் .இதற்கு ஒரு தாய் தன் குழந்தைக்கு பின் வரும் உணவு பொருட்களை சிறு வயதிலிருந்து கொடுத்து பழக வேண்டும் .
2.தயிரில் எலும்புகள், தசைகளை வலுப்படுத்தும் சத்துக்கள் உள்ளது .மேலும் இதில் எலும்பிற்கு தேவையான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளது .

3.மேலும் ஒவ்வொரு ஆண்டும் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றத்தை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
4.பீன்ஸ்-இல்உள்ள , நார்ச்சத்து, தாமிரம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தினசரி உணவில் பீன்ஸ் சேர்த்துக் கொள்வதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ,உயரத்தையும் அதிகரிக்கலாம்
5.காலையில் ஒரு கைப்பிடி ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் குழந்தை உயரமாக வளரும்
6.சிக்கனில் உள்ள புரதம், வைட்டமின் B12, நியாசின், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் B6 ஆகியவை , உங்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவுகின்றன.
7. ஒவ்வொரு முட்டையிலும் சுமார் ஆறு கிராம் புரதம் இருப்பதால், முட்டை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயரத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது


