இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் இவ்ளோ நன்மை அடங்கியிருக்கா ?
பொதுவாக இஞ்சி பூண்டு பேஸ்ட் டேஸ்டுக்கு மட்டுமல்ல ,பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி கொடுக்கும் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவியாக இருக்கிறது இஞ்சி-பூண்டு விழுது.இது ஒமட்டல், வாந்தி போன்றவை வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது
2.இஞ்சி பூண்டு விழுதினை உணவில் சேர்ப்பதன் மூலமாக ஒற்றை தலைவலி, பல்வலிகள், முதுகு வலி, தசைகளில் உண்டாகும் வலிகள் போன்றவை குணமாகும்.
3.இஞ்சி-பூண்டு விழுதை, தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது, கேன்சர் மற்றும் அல்சரில் இருந்து விடுபட வழிவகுக்கும்
4.இந்த பேஸ்ட் வயிற்றுப்போக்கைக் குறைக்கவும், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை போக்கவும், நச்சுகளை வெளியேற்றவும், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டில் நச்சுகளை அகற்றவும்,உடல் சரியாக செயல்படவும் உதவுகிறது
5.நம் உடலில் சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து, உங்கள் உடலை சூடாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
6.தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டுவதற்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் விநியோகத்தை அதிகரிப்பதற்கும் உதவகின்றது.
7.உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவும் இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் என்று சித்த மருத்துவம் கூறுகின்றது