இஞ்சியை வெந்நீரில் கொதிக்க வைத்து குடிக்க எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?
பொதுவாக காய்ச்சலும் ,சளியும் எளிதில் தொற்றாமல் இருக்க நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம் .அந்த வழிகள் பற்றி நாம் காணலாம்
1.இதற்கு நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற சில இயற்கை வழிகளை பின்பற்றினாலே நம்மை நோய்கள் தொற்றாது .
2.குளிர்காலத்தில் சளி மற்றும் காய்ச்சல் மிகவும் பொதுவான பிரச்சனை.
3. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர் .
4..குளிர்காலத்தில் குழந்தைகள் மற்றும் முதியோரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், சளி, காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவுகிறது.
5. இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். உப்பு, மஞ்சள் அல்லது திரிபலா பொடி கலந்த வெந்நீருடன் வாய் கொப்பளிப்பது நோய் நமக்கு தொற்றாமல் பாதுகாக்கும்
6.இந்த சளி மற்றும் நாசி பிரச்சனைகளுக்கு இஞ்சி நன்றாக வேலை செய்கிறது. இந்த இஞ்சியை வெந்நீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரையும் குடிக்க நோய் எதிர்ப்பு சக்த்தி கிடைக்கும் .
7.இந்த நோய் நமக்கு தொற்றாமல் பாதுகாக்க துளசி இலைகளை அரைத்து தேன் சேர்த்து சாப்பிட்டு வர பிரச்சனை நீங்கும்.