உங்கள் உணவில் இஞ்சியைச் சேர்ப்பது எந்த நோயை குணமாக்கும் தெரியுமா ?
பொதுவாக இஞ்சியை நாம் அன்றாடம் சாப்பிடும் பல்வேறு உணவு பொருளில் சேர்த்து வந்தால் நாளடைவில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடும் .மேலும் நமக்கு ஏற்படும் தொண்டை வலி முதல் சளியால் வரும் மண்டை வலி வரை குணமாகும் .இதற்கு எப்படி இஞ்சியை யூஸ் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் நீரை வெதுவெதுப்பாக சூடு பண்ணவும் .பின்னர் ஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி வெதுவெதுப்பான நீரில் போடவும்.
2.சிறிது நேரம் கழித்து, இந்தக் கலவையை வடிகட்டி கொள்ளவும் .பின்னர் அதை கொண்டு , வாய் கொப்பளிக்கவும் அல்லது மவுத்வாஷாகப் பயன்படுத்தவும்.
3.இப்படி தனியாகவோ அல்லது உங்கள் உணவிலோ இஞ்சியைச் சேர்ப்பது தொண்டை புண் மற்றும் தொண்டை அழற்சியைக் குறைக்க உதவும்.

4. மேலும் தொண்டை புண் அறிகுறிகளை குணமாக்க, சூப்கள் அல்லது பிற உணவுகளில் சிறிது துருவிய இஞ்சியைச் சேர்க்கவும்.
5.ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சேர்த்து கொள்ளவும் .
6.பின்னர் அதை நாள் முழுவதும் குடித்து வந்தால் தொண்டைக்கு இதம் கிடைக்கும்.
7. மேலும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் இஞ்சி டீ குடிப்பது, இஞ்சி தண்ணீருடன் வாய் கொப்பளிப்பது அல்லது உங்கள் உணவில் இஞ்சியைச் சேர்ப்பது உங்கள் தொண்டையில் வீக்கம் மற்றும் வலியைக் குறைத்து ஆரோக்கியம் மேம்படும்


