இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர எந்த நோய் ஓடும் தெரியுமா ?

 
honey

பொதுவாக நம் உடலில் தினம் பித்தம் ,வாயு ,கபம் சேர்ந்து கொண்டே வரும் .இதனை அவ்வப்போது நீக்க வில்லையென்றால் உடலில் பல்வேறு ஆரோக்கிய கேடு உண்டாகும் .அதனால் இந்த பதிவில் இஞ்சி மூலம் நாம் எப்படி ஆரோக்கியத்தை அடையலாம் என்று பார்ப்போம்

1.இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

Ginger

2.பொதுவாக , ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதை இஞ்சி சரிசெய்யும்.

3.மேலும் இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுக்கும்.

4.இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

5.இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும்.

6.அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

7.இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து கொள்வோம் 

8.அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும் 

9.இந்த இஞ்சி தேன் மூலம் பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும்.

10.இஞ்சி தேன் மூலம் ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்