குறைந்த கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டால் எந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?

பொதுவாக காய்ச்சல் ,சளி .இருமல் போன்ற நோய்களுக்கு இந்த குளிர்காலம் கொண்டாட்டமான காலம் எனலாம் .எனவே இந்த வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடமிருந்து நாம் தப்பிக்க நம்முடைய உடலில் இம்மியூனிட்டி பவரை அதிகப்படுத்த வேண்டும் .இதற்கு என்ன செய்யலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1. இஞ்சி ,பூண்டு இரண்டும் இம்மியூனிட்டி பவரை அள்ளி கொடுப்பவை .அதனால் இஞ்சி டீ ,அல்லது இஞ்சி துவையல் அடிக்கடி செய்து சாப்பிடலாம் ,
2.மேலும் பூண்டு சட்னி முதல் பூண்டு பொடி வரையில் சேர்த்து கொள்வது நலம் சேர்க்கும் .
3.மேலும் தயிர் ,சிட்ரஸ் பழங்கள் ,காளான் ,க்ரீன் டீ போன்ற உணவு பொருட்களும் நமக்கு இம்மியூனிட்டி பவரை அதிகப்படுத்தி கொடுக்கும் .மேலும் சில வழிமுறைகளை பார்க்கலாம்
4. பல மருத்துவர்கள் கலந்து கொண்ட டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், குறைந்த கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டபோது, அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன. 5.மேலும், கலோரிகளை வெறும் 10 சதவிகிதம் குறைப்பதன் மூலம் அதிக எடை கொண்டவர்களுக்கு இது இம்மியூனிட்டியை அதிகப்படுத்தும் .
6.மற்ற ஆய்வுகளும் இதேபோன்ற முடிவுகளைக் கண்டறிந்துள்ளன, இதனால் அங்கு மக்கள் ஒரு மாதத்தில் 5 கிலோ உடல் எடையை குறைத்துதங்களின் இம்மியூனிட்டி பவரை அதிப்படுத்தி கொண்டனர்