இரவு தூங்கும் முன்பு நீர்காய்களை சாப்பிட்டால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
sleep

பொதுவாக இன்று கூட்டு குடும்பம் போய் தனி குடித்தன முறை வந்ததும் பல முதியோர் தனிமையில் வசிப்பதால் அவர்கள் முறையான தூக்கமின்றி தவித்து வருகின்றனர் .மேலும் அவர்கள் வயதாகிவிட்டதால் உடற்பயிற்சி செய்வதையும் தவிர்த்து விடுவதால் தூக்கம் வராமல் தவித்து வருகிறார்கள் .இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.இதற்கு அவர்கள் எளிமையான எக்சர்சைஸ் மாலை நேரத்தில் செய்து வந்தால் தூக்கமின்மையால் வரும் மாரடைப்பு ,நீரிழிவு ,பக்க வாதம் போன்ற நோய்களை தவிர்க்கலாம் ,

Sleeping

2. தூங்கும் முன்பாக  தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3.,   இரவு தூங்கும் முன்பு நீர்காய்களை சாப்பிட்டால், இரவு நேரத்தில் சிறுநீர் பையை விரைவில் நிரப்பி, நள்ளிரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க போவதால் தூக்கம் கெடும்
4.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  இரவு தூங்கும்  முன் காரமான உணவுகளை சாப்பிட்டால், அது அஜீரண கோளாறுகளை  ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும் ,
5.மேலும் நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும்  
6.காரசாரமான உணவில் காணப்படும் கேப்சைசின் என்னும் பொருள், உடலின் வெப்பநிலையை அதிகரித்து  தூக்கம் வராமல் செய்யும்