எலுமிச்சை சாறுடன் சுக்கை கலந்து பத்து போட எந்த வலி குறையும் தெரியுமா ?
பொதுவாக மூட்டு வலிக்கு முறையற்ற உணவு பழக்கம் முதல் வாழ்க்கை முறை வரை காரணமாக கூறலாம்.இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .
1.மூட்டுகளை சுற்றியுள்ள ஜவ்வுகளில் எலும்பு தேய்மானம்தான் இந்த மூட்டு வலி வருவதற்கான முக்கிய காரணம் என்று கூறலாம் .
2.இதற்கு வீட்டு வைத்தியமாக தினமும் சாதம் வடித்த கஞ்சியை மூட்டு பகுதியில் ஊற்றி வந்தால் நிவாரணம் கிடைக்கும்
3. மூட்டு வலியால் நடக்க சிரமப்படுவோர் சிறிதளவு கறுப்பு எள்ளை கால் டம்பளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து விடுங்கள் .
4.அதன் பின் அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி உங்கள் வீட்டை விட்டே ஓடி விடும்
5. மூட்டு வலியால் வீட்டு மூலையில் முடங்கியிருப்போர் உடனடியாக குறைய தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் சிறிதளவு கற்பூரத்தை கலந்துகொள்ளவும் .
6.அதன் பின் வெதுவெதுப்பாக வலி இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்தால் உடனே வலி இருந்த இடம் தெரியாமல் பறந்து போய் விடும் ..
7. மூட்டு வலிக்கு பல வைத்தியம் பார்த்தும் அலுத்து போனவர்கள் எலுமிச்சை சாறு விட்டு சுக்கை நன்கு அரைத்து அதில் பத்து போட்டு வாருங்கள் டக் கென்று வலி குறைந்து விடும்
8.அடுத்து இன்னும் ஒரு வீட்டு வைத்தியமாக வேப்பம் பூ, வாகைப் பூ ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை உலர்த்தி பின் பொடி செய்து தினமும் அரை ஸ்பூன் உண்டு வந்தால் மூட்டு வலி நோயாளிகளின் முகத்தில் சிரிப்பை காணலாம்