கடுக்காய் தூள் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்துக்கு காலையில் இஞ்சி ,நண்பகல் சுக்கு ,இரவில் கடுக்காய் சாப்பிட சொன்னார்கள் .கடுக்காய் பொடியின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.கடுக்காய் பொடி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் .
2.மேலும் நா வறட்சி ,ரத்த குறைவு ,வெண் புள்ளி ,கை கால் எரிச்சல் ,குணமாகும் .
3.மேலும் இந்த பொடி கொண்டு பல் துலக்கினால் ஈறுகள் பலப்பட்டு பற்கள் பலம்பெறும்
4. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் அளவு கடுகாய் தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால் போதும் உடலில் சுகர் அளவு நார்மலாக இருக்கும்
5.கடுக்காயை அடிக்கடி சாப்பிட்டு வருவோருக்கு மன நலம் சிறப்பாக இருக்கும் என்று பழைய ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டுள்ளது .
6. கடுக்காய் தூள் பொடியை வாரத்திற்கு ஒரு முறை இதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர, நமது உடலில் ஓடும் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும்.