பனங்கருப்பட்டியில் பதுங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக தென் மாவட்டங்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியைத்தான் உபயோக படுத்துகின்றனர் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இதில் உள்ள சுண்ணாம்பு சத்தும் ,நோய் எதிர்ப்பு சக்தியும் வேறு எந்த மாத்த்திரை மருந்துகளிலும் கிடையாது .
2.கருப்பட்டியில் செய்யப்படும் இனிப்பு பண்டங்கள், பணியாரங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு உடல் ஆரோக்கியத்தினை உண்டு பண்ணி நன்றாக அவர்களை களைப்பில்லாமல் விளையாட வைக்கும் .
3.நாள்பட்ட வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு இந்த கருப்பட்டியை கொண்டு எளிய முறையில் அவர்களுடைய வறட்டு இருமலைப் போக்க முடியும்.
4.தொடர்ந்து நாள்பட்ட இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல் விரைவில் குணமாகும்.
5.வறட்டு இருமல் மட்டுமல்ல நீண்ட நாள்களாக இருக்கக்கூடிய சளி தொல்லையையும் இது போக்கக்கூடியது. 6.பனங்கருப்பட்டி யில் அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளது. இதனால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.