ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் இந்த உணவுகள் அவசியம்

 
Meat and Fish

பொதுவாக குறைந்த ரத்த அழுத்தம் பிபி அளவு 90/60 மிமீ எச்ஜி-க்கு கீழ் இருந்தால் மங்கலான பார்வை, தலைச்சுற்றல், மயக்கம், பலவீனம், குமட்டல், வாந்தி, குழப்பம் போன்ற அறிகுறிகள் தோன்றி படுத்தி எடுக்கும் .இதன் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  ,
1.உடலில் நீரின் அளவு குறையும் போது, நாம் உண்ணும் உணவில் போதுமான அளவு சத்துகள் உடலுக்குக் கிடைக்காத போதும் தீவிரமான அழற்சி போன்றவற்றினால் குறை இரத்த அழுத்தம் ஏற்படலாம்.
2.குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போதுமான அளவு தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும்

bp
3.சத்தான உணவுகள் போன்றவற்றின் மூலம் குறை இரத்த அழுத்தம் சரிசெய்யலாம்.
4.குறைந்த  இரத்த அழுத்தம் உள்ளோர் தண்ணீர், பழச்சாறுகள், குளுக்கோஸ், இளநீர் என திரவ உணவுகளை எடுத்து கொள்வது அவசியம்.
5.குறைந்த  இரத்த அழுத்தம் உள்ளோர் முட்டை, தானியங்கள், இறைச்சி, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் , கோழி கறி, தயிர், சால்மன் மீன், மாட்டிறைச்சி போன்றவைகளை எடுத்து கொள்ள வேண்டும்
6.குறைந்த  இரத்த அழுத்தம் உள்ளோர் சிட்ரஸ் பழங்கள், பயறு வகைகள் , பீன்ஸ், கீரைகள், முட்டை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.
7.குறைந்த  இரத்த அழுத்தம் உள்ளோர் சூப், பாலாடைக்கட்டி, வறுத்த மீன், ஊறுகாய் மற்றும் ஆலிவ் எண்ணெய் உணவுகள் ஆகியவையும் எடுத்து கொள்ளவும்