பக்கவாதம் நம்மை தாக்காமல் தடுப்பது இப்படித்தான் .

 
peralisis

பொதுவாக நமது வாழ்க்கை முறை அனைத்து நோய்களுக்கும் முக்கியமான காரணமாகும். வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் தடுக்கலாம். பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி என்று இப்பதிவில் நாம் காணலாம்

1.பொதுவாக மூளை சம்பந்தமான நோய்களுக்கு நேரம் மிகவும் முக்கியம் பக்கவாதத்தை பொறுத்தவரை அறிகுறிகள் தெரிந்த எவ்வளவு விரைவில் இதற்கான தகுந்த சிகிச்சை முறை உள்ள மருத்துவமனையில் சேர்க்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.
2.பக்கவாதத்தின் அறிகுறிகள் தெரிந்த முதல் 3 மணி நேரம் என்பது மிகவும் முக்கியம் அதற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும்.

brain
3.மருத்துவமனையில் பக்கவாதத்தை கையாள்வதற்கான அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். 4.ஏனெனில் சிகிச்சைக்கு CT ஸ்கேன், MRI  ஸ்கேன், நரம்பியல் மருத்துவர் போன்ற அனைத்தும் முக்கியமாகும்.
5.இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை மருந்துகள் மூலம் கரைப்பதன்  மூலமாகவோ, அடைப்பை நீக்குவதன் மூலமாகவோ சரி செய்வதன் மூலம் விரைவில் குணம் அடையலாம்
6.நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, புகைப்பிடிப்பதை தவிர்ப்பது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, சத்தான உணவு முறை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது போன்றவற்றின் மூலம் பக்கவாதத்தை தடுக்கலாம்.