ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டெஸ்ட் பண்ணிக்கோங்க

 
women phone

பொதுவாக ஒரு பெண் கர்ப்பத்திற்கான  முதல் அறிகுறி அவருக்கு மாதவிடாய் தள்ளி போவது .இது பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்
1. அந்த கர்ப்ப  நாட்களில் காலையில் குமட்டல் ,வாந்தி வருவது போன்ற அறிகுறி காணப்படும் .
2.மேலும் காலையில் மயக்கம் ,வயிற்றில் நிறைய காற்று புகுந்து கொண்டு வயிறு உப்பிசமாய் இருக்கும் 3..அடுத்து பல கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும் .

pregnent women
4.மேலும் சில பெண்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும் .அதனால் புளிப்பான உணவுகளை நாக்கு விரும்பும்
5.கப்பிணிகளின்  ஆரம்ப நாட்களில் மார்பகங்கள் அளவில் பெரியதாகவும் அதிக ரத்த ஓட்டத்தினால் தொடும்போதும் வலியும் மார்பக காம்புகளில் சிலிர்ப்பு போன்றவை ஏற்படலாம்.
6.கருத்தரித்திருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு  மலச்சிக்கல் ஏற்படும். நார்ச்சத்து நிறைந்த உணவு அதிக அளவில் எடுப்பது மற்றும் அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கலை குறைக்கலாம்.
7. கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை வளர வளர அதிகமாக நெஞ்செரிச்சல் ஏற்படும். உணவுகளை இடைவெளி விட்டு சிறிது சிறிதாக உண்பதன் மூலம்  மசாலா உணவுகளை குறைப்பதன் மூலம் இதை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம் .