அசிடிட்டி முதல் வயிற்று பொருமல் வரை தீர்க்கும் இந்த உணவின் பயனை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக சைவமோ அசைவமோ எந்த உணவு முறையை கையாண்டாலும் இறுதியில் ரசம் சாப்பிட்டால் செரிமானம் நன்றாக இருக்குமென்று நம் முன்னோர்கள் இந்த ரசத்தை நம் உணவில் சேர்த்து வந்தனர் .ரசத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.இதில் சேர்க்கப்படும் மிளகு நம் உடலில் புற்று நோய் முதல் பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது .
2.ரசத்தில் மெக்னீசியம் ,சிங்க் ,கால்சியம் ,பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது 3.மேலும் குழந்தைகளின் முதல் உணவு ரசம் .சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு ரசம் சாதம் கொடுத்தல் நலம் ,அவர்களும் விரும்பி உண்பார்கள் .
4.மேலும் ரசம் அசிடிட்டி ,வாயு தொல்லை ,வயிற்று பொருமல் ,வயிறு உப்பிசம் போன்ற உடல் உபாதைகளை விரட்ட கூடியது .
5.பாரம்பரியமாக, ரசம் அதன் செரிமான பண்புகளுக்கு அறியப்படுகிறது. மேலும் இது பல்வேறு வயிற்று பிரச்சனைகளுக்கு ஒரு வரமாக இருக்கும்.
6.ரசத்தில் சேர்க்கப்படும் புளியில் உள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. 7.கூடுதலாக, ரசத்தில் கருப்பு மிளகு பயன்படுத்துவது செரிமானத்திற்கு உதவும்