பல்லை நீண்ட நேரம் துலக்கினால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?
பொதுவாக நாம் உணவு உண்ண முக்கியத்துவம் வாய்ந்த பல்லை நாம் பாதுக்காக்க வேண்டும் ,அதற்கான சில டிப்ஸ்களை கூறியுள்ளோம் . அந்த டிப்ஸை படித்து பயன் பெறவும்
1.உங்கள் வாய்க்குள் செல்லும் அனைத்துமே முதலில் உங்கள் பற்களைப் பாதிக்கின்றது.
2.அதிக அளவு இனிப்பு உணவுகளான சாக்லேட், மிட்டாய்கள், ஐஸ் - கிரீம்கள் போன்றவை பற்களில் சொத்தை உண்டாக்கும்
3.அமில உள்ளடக்கம் கொண்ட உணவுகளான ஊறுகாய், ஸ்ட்ராபெர்ரி , கோலா போன்ற காற்றூட்டப் பட்ட பானங்கள் பல்லை பாதிக்கும்
4.மற்றும் மிகவும் குளிர்ச்சியான மற்றும் சூடான உணவுகள் போன்றவை பற்களில் உள்ள எனாமலின் எண்ணிக்கையை குறைத்து பல் கூச்சத்திற்கு வழிவகுக்கும்

5.எனவே பல்லை பாதுகாக்க தினம் இருவேளை பல் துலக்க வேண்டும்
6.மேலும் இரவில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்
7.பல்லை நீண்ட நேரம் துலக்கினால் அது ஈறுகளை பலவீனப்படுத்தி விடும்
8.பல்லில் சொத்தை சிறு புள்ளி போல ஆரம் பிக்கும்போதே டாக்டரிடம் சென்றால் குணப்படுத்த வேர் சிகிச்சை செய்யலாம்
9.கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் பற் சிதைவை உண்டாக்கும் .எனவே இவற்றை எப்போது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்
10.பல்லால் நகத்தினை கடித்தல் நோய் தொற்றுக்கு வழி செய்யும்


