பித்த நோயால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்றவை நீங்க உதவும் இந்த இலை
பொதுவாக மூலிகைகளில் முக்கியமானது தூது வலை .இந்த தூது வலை நம் உடலில் உண்டாகும் நோய்களை குணப்படுத்தும் தூதுவன் என்று சொல்லலாம் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.உடல் வலிமை பெற தூதுவளையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் .
2.குளிர்காலத்தில் சளி பிரச்சினையால் அவதி படுவோர் தூது வளையை அடை செய்தோ இல்லை துவையல் செய்தோ இல்லை சட்னி செய்தோ சாப்ப்பிட்டு வரலாம் .
3.மேலும் எலும்பு தேய்மான பிரச்சினை இருப்போரும் இந்த துவையலை சாப்பிடலாம் .
4.மார்பு சளி குறைய தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிடலாம்
5.உடலில் இருக்கும் இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்கள் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். இவை குறையும் போது இரத்த சோகை ஏற்படுகிறது.
6.இந்நோய் பிரச்சனை தீர தூதுவளை பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
7.உடலில் பித்தம் அதிகரிப்பதால் சிலருக்கு தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும்.
8.உடலில் பித்தத்தை சமநிலைப்படுத்த தூதுவளை உதவுகிறது. தூதுவளை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்றவை தீரும்.