துளசி இலையில் ஒளிந்துள்ள ஆரோக்கியம் பற்றி தெரியுமா ?
பொதுவாக இந்த சளிக்கு டாக்டரிடம் சென்றால் எதையோ ஒரு ஆன்டி பயோடிக் மாத்திரையை எழுதி கொடுப்பார் .ஆனால் இதற்கு வீட்டிலேயே எளிய சிகிச்சை யுள்ளது .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.மிளகை ஒரு காட்டன் துணியில் வைத்து உச்சந் தலையில் தேய்த்தது வந்தால் இந்த சளி குறையும் .
2.மிளகை தூளாக்கி வெல்லம் ,நெய் சேர்த்து சாப்பிட குணமாகும் .அல்லது தேனில் மிளகு தூளை கலந்து மூன்று வேலை சாப்பிட சளி ஓடி விடும் .
3.தேனுடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் சளி குறையும் .மேலும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்

4. மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர சளி சரியாகும்.
5.கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் ,சளியால் வந்த தொண்டை வலி குணமடையும் ..
6.மிளகுத்தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சளியால் வந்த இருமல் காணாமல் போகும்
7.பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டி கொண்டிருந்தால் குணமாகும் .
8.கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் சளி குணமாகி நம் ஆரோக்கியம் சிறக்கும் .
9.துளசி இலைகள் ஆஸ்துமா, சளி, இருமல் மற்றும் காய்ச்சலில் நிவாரணம் தரும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது .


