மஞ்சளை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் எந்த நோயை அடித்து விரட்டலாம் தெரியுமா ?
பொதுவாக மஞ்சள் கலந்த தண்ணீரை குடிப்பதால் நமக்கு பல மருத்துவ நன்மை உண்டாகும் .அதனால் ஏற்படும் நன்மைகளை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1.நான் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பயன்படுத்தக்கூடிய முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்று மஞ்சள்.
2.இது ஒரு ஆயுர்வேத மூலிகையாகவே சொல்லப்படுகிறது.
3.இதில் இரும்பு நார்ச்சத்து கால்சியம் துத்தநாகம் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 4.மேலும் இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது.
5.இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
6.மஞ்சளை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் பருவ காலத்தில் வரும் நோய்களிலிருந்து விலகி இருக்க முடியும்.
7.மஞ்சளில் இருக்கும் சத்துக்கள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குவது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
8.இது சருமத்திற்கு ஆரோக்கியத்தை கொடுத்து உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. குறிப்பாக உடல் வலி எலும்பு வலி பிரச்சனைக்கு முக்கிய மருந்தாக இருக்கிறது.
9.தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டி குடித்து வர வேண்டும்.
10.எனவே மஞ்சள் கலந்த தண்ணீரை குடிப்பதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.