வல்லாரை கீரையை துவையல் செஞ்சி சாப்பிட்டால் எந்த பாகத்துக்கு நல்லது தெரியுமா ?

 
greens

பொதுவாக வல்லாரை கீரையில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த கீரையை நாம் பல வடிவத்தில் சமைத்து சாப்பிட நமக்கு உடலில் உள்ள பல நோய்கள் விலகும் .

வல்லாரைக்கீரையை ஒரு துவையலாகவோ அல்லது வெறும் வல்லாரைக்கீரையை அரைத்து, விழுதாகவோ, தண்ணீர் விட்டு விழுங்கிடலாம். மேலும் இந்த பதிவில் இந்த வல்லாரை கீரை மூலம் நாம் அடையும் பலன்கள் பற்றி பார்க்கலாம்

1.வல்லாரை கீரையை  தினமும் தொடர்ந்து சாப்பிட்டு  வரும்போது, எந்த வித தோல் நோயாக இருந்தாலும் சரியாகிவிடும்.

2.நமது மூளைக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது இந்த வல்லாரைக்கீரை. அதனால்தான் இந்த வல்லாரைக்கீரைக்கு சரஸ்வதி என்று மற்றொரு பெயரும் உள்ளது.

brain

3.சில குழந்தைகள் மந்தமாக படிக்கும்.இந்த  குழந்தைகள், தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை, காலையில் வெறும் வயிற்றில்  தொடர்ந்து பச்சையாகக் கொடுத்து வரும் பொழுது நன்கு மூளை வளர்ச்சி அடையும்.

4.வல்லாரை இலையை வாயில போட்டு நன்றாக மென்று அந்த சாறை குடித்து வந்தால் குடலில் இருக்கக்கூடிய புண், குடல் நோய், வாய் புண், வாய் துர்நாற்றம் அனைத்தும் சரியாகி விடும்.

5. ஆரோக்கியம் தரும் வல்லாரை கீரையை, தினமும் சாப்பிடுபவர்களுக்கு கண் மங்கல் முற்றிலும் சரியாகும்.

6.ஆரோக்கியம் தரும் வல்லாரை கீரை கண்களுக்கு நன்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அஜீரணக் கோளாறுகள் எல்லாவற்றையும் நீக்கக்கூடியது இந்த வல்லாரைக்கீரை.

7.ஆரோக்கியம் தரும் வல்லாரைக் கீரையை நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்து , தோசையாக செய்து கொடுக்கலாம். இந்த தோசையும் மிகவம் சுவையுடன் இருக்கும்.

8.ஆரோக்கியம் தரும் வல்லாரை கீரை குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

9.இளநரை இருப்பவர்களும் சரி, அல்லது தலையில் வெள்ளை முடி இருப்பவர்களும் சரி தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை சாப்பிட்டுட்டு வரும்பொழுது, அந்த வெள்ளை முடி கருமையாக மாற ஆரம்பிக்கும்.