ஒரு கப் வெந்தய டீ இத்தனை நோய்களை விரட்டும்னு பந்தயம் கட்டலாம்

 
vendhayam

பொதுவாக நமக்கு வெந்தயம் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது இந்த வெந்தயம் சக்கரை நோய்க்கு மருந்தாகிறது .மேலும் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது .அதனால் இப்பதிவில்

வெந்தய டீ யில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் பலரும்  உடல் பருமனால் பாதிக்கப்பட்டு, அதனை குறைக்க பல்வேறு டயட்ட்களும் உடற்பயிற்சிகளும் செய்து வருகின்றனர் . அப்படியும் உடல் எடை குறையாமல் இருக்கிறது

vendhayam tea

2.அந்த வகையில் உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான முறையான வெந்தய டீ செய்து குடிக்கலாம்

3.இந்த வெந்தய டீ தயாரிக்க முதலில் வெந்தய விதைகளை ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக அரைத்து அதனை பொடியாக்கி கொள்ளவும்

4. பின்னர் இந்த வெந்தய பொடியை  கொதிக்கும் நீரில் சேர்த்து தேவைக்காக சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம்.

5.அப்படி வெந்தய பொடியில் தேன் சேர்த்து குடிக்கும்போது அது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்து விடும்

6.கொலஸ்ட்ராலை குறைப்பதுடன் உடல் எடையை குறைக்க வெந்தய தேநீர் உதவுகிறது.

7.இது மட்டும் இல்லாமல் இந்த வெந்தய டீயில்நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது 

8.இந்த வெந்தய டீ செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல், அஜீரணம் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

9.எனவே ஆரோக்கியம் தரும் வெந்தய டீ குடித்து கொலஸ்ட்ராலை குறைத்து கொள்ளவும்

10.இந்த  வெந்தய டீ மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.