உடல் எடை குறைக்க இதை விட சிறந்த வழிகள் இல்லை

 
walking

பொதுவாக இப்போது பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை இருக்கிறது .இந்த உடல் எடையை குறைக்க பல்வேறு ஆரோக்கியமான வழிகள் உள்ளன .அந்த வகையில் உடல் எடை குறைக்க சில இயற்க்கை வழிகள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்

அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.

1.உடல் எடை குறைக்க சீரான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடலாம். காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.

Tips to Lose Weight

2.உடல் எடை குறைக்க தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.

3.உடல் எடை குறைக்க தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம்.

4.உடல் எடை குறைக்க தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.

5.உடல் எடை குறைக்க அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில்சேருங்கள்.

6.உடல் எடை குறைக்க உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுதல் நல்லது.

7.உடல் எடை குறைக்க அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ளடோன்டுபாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடலாம்.

8.உடல் எடை குறைக்க நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.

9.உடல் எடை குறைக்க வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள்.

10.உடல் எடை குறைக்க நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.