நரை முடியை கரு முடியாக மாற்ற உதவும் இந்த டிப்ஸ்
பொதுவாக இப்போது இளம் வயதிலே நரை முடி வந்து விடுகிறது .இந்த
.நரைமுடி பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1.நரைமுடி பெரும்பாலும் ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடியது.
2.ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும் இந்த பிரச்சனையை மேற்கொள்கின்றன.
3.இது முக்கியமாக மரபணு காரணங்களால் வருவது மட்டுமில்லாமல் ஆரோக்கியம் அற்ற உணவு முறையும் ஒரு காரணம்.
4. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட தேங்காய் எண்ணெயில் நாம் என்னென்ன சேர்த்து தடவ வேண்டும் என்று பார்க்கலாம். அப்படி நாம் தடவி வந்தால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.
5.முதலாவதாக மருதாணி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைக்க வேண்டும்.
6.பிறகு அந்த இலையை எண்ணெய் சேர்த்து நிறம் மாறும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து சுத்தம் செய்ய வேண்டும்.
7.இரண்டாவதாக மூன்று ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சேர்த்து சூடாக்கி அந்த பேஸ்ட்டை இரவில் முடியில் தேய்த்து விட வேண்டும்.
8.அப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் அதன் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும்.
9.எனவே நரை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வீட்டிலேயே எளிய முறையினால் இந்த பிரச்சனையை நீக்கி முடி கருப்பாக வளர வைக்க முடியும்.