ஆளிவிதையை சுண்டல் போல சாப்பிட்டால் எந்த நோய் தாக்காது தெரியுமா?

 
aali seeds

பொதுவாக   ஆளி விதைகள் பல மருத்துவ குணம் அடங்கியுள்ளது .இதை அதிகமாக சுண்டலாகவோ இல்லை பல வடிவத்தில் உண்ணலாம் .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளிவிதைக்கு உள்ளதாக பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன .
2.சிலருக்கு சுகர் அளவு கூடிக்கொண்டே போகும் .அவர்கள் ஆளி விதைப் பொடியை பாலில் கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

sugar
3.சிலருக்கு இதய பிரச்சினை இருக்கும் .அவர்கள் ஆளி விதை பொடியை பாலில் கலந்து குடிப்பது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.இதன் காரணமாக, இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
4.சிலருக்கு மலசிக்கல் இருக்கும் . ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும்.
5.சிலருக்கு சரும பிரச்சினை இருக்கும் .ஆளிவிதையின் எண்ணெயை சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்
6.ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய்வராமல் தடுக்கிறது.
7.இந்த ஆளி விதைகள் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன.