கண் பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கும் இந்த காய்
பொதுவாக நெல்லிக்கனியின் மகத்துவம் இன்றைய தலை முறையினருக்கு கொரானா காலத்தில்தான் தெரிய வந்தது .நெல்லிக்கனியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. நெல்லிக்கனியில் ரத்தத்தில் நம் சர்க்கரை அளவு கூடாமல் பாதுகாக்கும் .
2.மேலும் ரத்த அழுத்தம் அதிகமாகாமல் நம்மை பாதுக்காக்கும் உடம்பிலும் ,வயிற்றிலும் உள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது ,
3.நம் உடலில் கழிவுகள் வெளியேறாவிட்டால் அது பல நோய்களை உருவாக்கும் ,ஆனால் நெல்லிக்கனி உண்டால் நம் உடலில் கழிவுகளை வெளியேற்றி நம்மை பல பெரிய நோய்களிலிருந்து காக்கும் .
4.ஆனால் நெல்லிக்கனியை சிறுவர்களுக்கு இரவில் கொடுத்தால் சளி பிடிக்கும் ,அதனால் பகலில் கொடுக்கலாம் .
5. வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காய்களை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
6.குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நெல்லிக்காய்களை உண்பது மிகவும் நல்லது.
7. கண் பார்வை மேம்பட நெல்லிக்காய் மிகவும் உதவியாக இருக்கும். நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும்.
8. நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.