அருநெல்லிக்காயில் வடாகம் செய்து சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 
amla

பொதுவாக  விட்டமின் சி  நம் உடலில் பல நோய்கள் வராமலே தடுக்கும் ஆற்றல் கொண்டது .அதுவும் சாதா நெல்லிக்காயை விட அரு நெல்லிக்காயில் விட்டமின் சி யுடன் பல மருத்துவ குணமுள்ளது .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.சிலருக்கு ஆஸ்த்மா கோளாறு இருக்கும் .அவர்கள் அருநெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.

asthma
2.சிலருக்கு கண் பார்வை கோளாறு இருக்கும் .அவர்கள் அருநெல்லிக்காய் உண்டால் கண்பார்வையை தெளிவாக்குகிறது.
3.இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதை விட அருநெல்லிக்காயில் வடாகம் செய்து சாப்பிட்டு வந்தால் கண்களில் பார்வை அதிகரிக்கும்.
4.சிலரின் உடலில் பித்தம் அதிகமிருக்கும் .அத்திக்காய், அருநெல்லிக்காய், வாழைப்பழம் இந்த மூன்றையும் சாறு எடுத்து கற்கண்டு பொடி சேர்த்து கொடுத்து வர பித்தவாந்தி குறையும்.
5.சிலருக்கு அடிக்கடி வாந்தி வரும் .அருநெல்லிக்காய் வற்றல், சீரகம், திப்பிலி, நெல் பொறி ஆகியவற்றை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாந்தி குறையும்.
6.அருநெல்லிக்காய் சாறு, பச்சை திராட்சை சாறு, வெள்ளை வெங்காயச்சாறு மூன்றையும் கலந்து படிக்காரபஸ்பம் ஆகியவற்றை சர்க்கரை சேர்த்து சாப்பிட மேகவெள்ளை குறைந்து நம் ஆரோக்கியம் சிறக்கும்