வீட்டுக்குள் செருப்பு போட்டு நடக்கறீங்களா ?இதை அவசியம் படிங்க

பொதுவாக நகர்புறத்தில் உள்ள வீடுகளில் பலர் வீட்டுக்குள்ளயே செருப்பு அணிந்து கொண்டு நடக்கின்றனர் .மேலும் சூரிய ஒளியும் உடலில் படாமல் வளர்கின்றனர் ,இதனால் புது புது நோய்கள் உடலில் உண்டாகிறது .இதனால் வெறும் காலில் செருப்பு அணியாமல் மண்ணோடு தொடர்பு கொண்டு நடப்பதால் உண்டாகும் நன்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.மேலும் பாதங்களில் உள்ள நரம்புகள் வலுப்பெற்று நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது .
2. வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் நம் இதயத் துடிப்பு சீராகி நமக்கு இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது
3. வீட்டுக்குள் வெறும் காலுடன் நடக்கும் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.
4. பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் கிடைக்கிறது .
5. வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் நம் நரம்பு மண்டல அமைப்பு சீராகிறது.
6. வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் நம் மன அழுத்தம் குறைகிறது.
7.வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் பூமியிலிருந்து போதுமான எலக்ட்ரான்கள் கிடைப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நம்மை நோயின்றி வாழ வைக்கிறது .