எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை செய்யும் இந்த பழம்
பொதுவாக நமக்கு ஆரோக்கியம் தரும் பழம்தான் ட்ராகன் பழம் .சிவப்பு நிறத்தில் தோற்றம் தரும் இது
நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் .இதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.டிராகன் பழம் என்பது ஒரு வகை கற்றாழை தாவரமாகும்.
2.ஆய்வுகளின்படி, டிராகன் பழம் நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது.
3.டிராகன் பழம் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.
4.அதுமட்டுமின்றி இப்பழத்தை சாப்பிடுவதால் உடல் பருமனும் கட்டுக்குள் இருக்கும். இது ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.
5.டிராகன் பழம் இது புற்று நோய் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது
6.மேலும் இந்த டிராகன் பழத்தை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
6.மேலும் டிராகன் பழத்தில் கால்சியம் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை செய்யும்