வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தண்ணீர் செய்யும் நன்மைகள் .
பொதுவாக சுக்கு மருத்துவத்தில் இது பல்வேறு நோய்களை குணப்படுத்தும் .இந்த சுக்கின் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு செரிமான கோளாறு இருக்கும் .உலர்ந்த இஞ்சி அல்லது சுக்கு அவர்களின் குடல் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
2.இந்த சுக்கில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் நமக்கு நன்மை பயக்கும் .
3.சிலருக்கு அஜீரணம் அல்லது மலச்சிக்கல் இருக்கும் .இது போன்ற வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சுக்கு தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
4. சுக்கில் நிறைய அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன ,இந்த பண்புகள் வயிற்றில் உள்ள செரிமான சாறுகளை நடுநிலைப்படுத்த உதவுகின்றன.
5. மேலும் சுக்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
6.. சுக்கில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன ,இந்த பண்புகள் பெண்களின் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தரும்.
7. சிலருக்கு சளி இருமல் இருக்கும் .இந்த இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் பெற வெதுவெதுப்பான நீரில் சுக்கு பொடியையும் கலந்து குடிக்கலாம்.
8.சுக்கு செரிமானத்தை மேம்படுத்தும் .அது மட்டுமின்றி உடலில் தேங்கியுள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.