இரும்பு சத்து நிறைந்த இந்த டீ யின் மற்ற நன்மைகள்

 
murungai

பொதுவாக முருங்கையில் நம் உடலுக்கு நிரைய ஆரோக்கியம் உள்ளது .அது எந்த நோய்க்கு நல்லது என்பது பற்றி இப்பதிவில் நாம் காணலாம்  

1.முருங்கை கீரையை கொண்டு   டீயும் தயாரிக்கப்படுகிறது.
2.தினமும் ஒரு கப் முருங்கை கீரை  டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ஆரோக்கியம் மேம்படும்
 3.இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது.

murungai keerai benefits
4.அதுபோல் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், பி6, சி மற்றும் மெக்னீசியம், பீட்டா கரோட்டீன் ஆகியவையும் இருக்கிறது
5.சர்க்கரை நோய் ,மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினை களுக்கு ஆளாகுபவர்களுக்கு முருங்கை டீ நன்மை பயக்கும். அது மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும்.
6.முருங்கை கீரை , நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் தன்மையும் அதற்கு இருக்கிறது.
7.பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை திறம்பட எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.
8.இந்த டீயை பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
9.தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒருவேளையாவது இந்த முருங்கை டீ பருகி வந்தால் நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் .