வேப்பம் பூவை தூளாக்கி வெந்நீரில் கலந்து பருகினால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக நம் பாரம்பரியமான நாட்டு வைத்தியத்தை செய்து வந்தால் நோய்கள் குணமடையும் .அந்த நாட்டு வைத்தியம் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு தீராத வயிற்று வலி இருக்கும் .அப்போது கொஞ்சம் வெந்தயத்தை நெய்யில் போட்டு
வறுத்து எடுத்து கொள்ளவும் ,பின் அதை பொடித்து எடுத்துக்கொண்டு அதை மோரில் சேர்க்கவும்
பின் அதை மோரில் கலந்து குடித்தால் தீராத வயிற்று வலியும் இருக்குமிடம் தெரியாமல்
சரியாகி விடும் .
2.சிலருக்கு தீராத சீதபேதி இருந்து மலம் போய் கொண்டேயிருக்கும் .அப்போது கொஞ்சம் நல்லெண்ணை எடுத்து கொள்ளவும் .பின்னர் அந்த எண்ணெயுடன் மலை வாழைப் பழம் சேர்க்கவும்
அந்த எண்ணெயுடன் அந்த பழத்தை சேர்த்து சாப்பிட்டால் தீராத சீதபேதியும் உடனே
சரியாகும்.
3.சிலருக்கு தீராத குடல் புண் இருக்கும் .அப்போது கொஞ்சம் மஞ்சளை சாம்பல் ஆகும் வரை
தீயிலிட்டு எரித்து எடுத்து கொள்ளவும் .பின்னர் , அந்த சாம்பளுடன் கொஞ்சம் தேன் சேர்க்கவும்
இப்படி மஞ்சளை தேனில் கலந்து சாப்பிட்டால் தீராத குடல்
புண் குணமாகும்.
4.சிலருக்கு தீராத மூலம் இருந்து கொண்டு பாடாய் ப்படுத்தும் ,அப்போது கொஞ்சம் கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாய் வெட்டி எடுத்து கொள்ளவும்
அப்படி துண்டு துண்டாய் வெட்டிய கருணை கிழங்குடன் துவரம் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்
அதை சாம்பாராக செய்து உணவில் சேர்த்து
சாப்பிட்டு வந்தால் மூலம் குணமடையும் .
5.சிலருக்கு அல்சர் வந்து பாடாய் படுத்தும் .அப்போது வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில்
கலந்து பருகினால் வாயுதொல்லை நீங்கும் .
ஆறா வயிற்றுபுண் ஆறும் .


