ஆலிவ் ஆயிலில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

பொதுவாக நல்லெண்ணெய் நமக்கு உடல் சூட்டை குறைத்து பல நன்மைகளை தரும் .அது போல கடலெண்ணெய் நமக்கு நல்ல பலத்தை கொடுக்கும் .அந்த வகையில் ஆலிவ் எண்ணெயில் சமையல் செய்தல் அது நம் இதயத்திற்கு நன்மை பயக்கும் .அதனால நாம் இப்பதிவில் ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியம் குறித்து நாம் காணலாம்
1.ஆலிவ் எண்ணெய் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் நமக்கு பங்களிக்கிறது .மேலும் நம் மூளையின் செயல்திறனை சிறப்பாக செயல்பட வைக்கும் இந்த எண்ணெய் ,
2.மேலும் சர்க்கரை நோயாளிகளின் சுகர் அளவை கட்டுக்குள் வைக்கும் .மேலும் இந்த ஆலிவ் எண்ணெயில் கேன்சர் நோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது ,
3.தினமும்இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், , முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக மெருகேற்றும்.
4.தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு தழும்புகள் மறைந்துவிடும்
5.தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும்.
6.மேலும் ஆலிவ் ஆயில் , சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.
7.பெண்களின் கர்ப்பக்காலத்தின் போது வயிற்றில் தோல் விரிவடைவதால் அரிப்பு ஏற்படாமலிருக்க ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்