வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?
பொதுவாக தேன் மூலம் 70க்கும் மேற்பட்ட மூலிகை குணம் அடங்கியுள்ளது .இதை வயிற்றின் நண்பன் என்று கூறுவதுண்டு .மேலும் தேனின் நன்மைகளை பார்க்கலாம்
1. தேன் விரைவில் செரிமான தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்கி நம் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது .,
2.தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கபல நோய்கள் பறந்து ஓடிவிடும்
3. தொப்பை கொழுப்பை குறைக்க விரும்பினால், தினமும் காலை வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்த இந்த பானத்தை குடிக்க தொப்பை கரைந்து விடும் .
4. படுக்கைக்கு முன் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுவது, நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், உடல் மற்றும் மனதை தளர்த்தவும் உதவுகிறது.
5.சிலர் உடலில் நச்சுக்கள் இருக்கும் ,அவர்கள் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தேன் குடித்து வந்தால் உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.
6.சிலருக்கு வாந்தி குமட்டல் இருக்கும் .அவர்கள் இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.
7.சிலருக்கு கண் பார்வை மங்கலாக இருக்கும் ,அவர்கள் வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.