இந்த காய்க்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியிருக்கா ?

 
vegetables

பொதுவாக சுரைக்காயில் நிரைய நன்மைகள் உள்ளது .இந்த சுரக்காயில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

1.அன்றாடம் சமைக்க பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று சுரைக்காய்.
2வைட்டமின் பி, சி, கே, இரும்புச்சத்து, ஜிங்க் பொட்டாசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

Organic Vegetables

3.சுரைக்காயை பக்கோடா கூட்டு பொரியல் என செய்யலாம்.
4.ஆனால் சுரைக்காய் சாறு குடிக்கும் போது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

5.வெயில் காலங்களில் உடலின் வெப்பநிலையை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
6.மன அழுத்தம் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

7.சுரைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
8.இது சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது.

9.மேலும் செரிமான பிரச்சனையில் இருந்தும் அஜீரண பிரச்சனையை தீர்க்கவும் சுரைக்காய் பயன்படுகிறது. மேலும் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

10.உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் இருக்கும் இரும்புச்சத்து எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.