வைட்டமின் பி12 நிறைந்திருக்கும் உணவு வகைகள்
பொதுவாக வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் பல அறிகுறிகள் தோன்றும் .இப்படி உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
1.உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12. இது உடலின் ரத்த அணுக்களை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
2.இது மட்டும் இல்லாமல் சோர்வு ,அஜீரணம், செரிமான பிரச்சனை, கை கால் வீக்கம், பசியின்மை போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
3.பி12 குறைபாடு உள்ளவர்கள் சில உணவுகளை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
4.உடலில் வைட்டமின் B 12 அதிகரிக்க இறைச்சி வகைகளான ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5.மீன் வகைகளில் சால்மன் மீனில் வைட்டமின் B 12 நிறைந்துள்ளது.
6.பிரட் பாஸ்தா போன்ற உணவுகளையும் சாப்பிடலாம்.
7.பால் சம்பந்தப்பட்ட தயிர் மோர் பன்னீர் போன்ற உணவு பொருட்களையும் சாப்பிடலாம்.
8.குறிப்பாக தினமும் காலை உணவில் முட்டை சேர்ப்பது மிகவும் நல்லது.
9.எனவே பி12 குறைபாடு உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.