இருதய நோய் முதல் மூட்டு வலி வரை வராமல் காக்கும் இந்த எண்ணெய் .
பொதுவாக வால்நட் எண்ணெயில் ஓமேகா 3 பேட்டி ஆசிட், ஆன்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்ஸ் உள்ளதால் இதை மக்கள் பயன் படுத்த தொடங்கியுள்ளனர் .இந்த எண்ணெயில் உள்ள ஆரோக்கியம் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
1.இந்த எண்ணெயில் உள்ள ஒமேகா 3நமக்கு இருதய நோய் முதல் மூட்டு வலி வரை வராமல் நம்மை பாதுகாக்கிறது .
2.மேலும் நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் பாதுகாக்கிறது அது மட்டுமல்லாமல் இது நம் உடலில் தோல் நோய்கள் வராமல் காக்கிறது ,
3.மேலும் எக்சிமா போன்ற ஸ்கின் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாக்காமலும் காத்து ,நம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது .
4.வால்நட் எண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம் நமது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து நம்மை காக்கிறது
5.வால்நட் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது .
6.வால்நட் எண்ணெயை முகத்தில் தடவினால் தோல் சுருக்கங்கள் குறைந்து ஸ்கின் பொலிவுடன் இருக்கும் .
7.அது மட்டுமல்லாமல் குளிப்பதற்கு முன் தலை முடியில் வால்நட் எண்ணெயைத் தடவினால் பொடுகுத் தொல்லை குறைந்து முடி ஆரோக்கியம் காக்கப்படும் .