ஹார்ட் அட்டாக் யாரையெல்லாம் தாக்காது தெரியுமா ?

பொதுவாக நம் நாட்டில்தான் இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகம் .
.இந்த ஹார்ட் அட்டாக்கை தடுக்க பின் வரும் எளிய வழிகளை பின் பற்றினால் போதும் .அவை என்னவென்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்
1.மாடிப்படிக்கட்டுகளை லிப்ட் பயன் படுத்தாமல் ஏறி இறங்குவோருக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறைவு .தினம் 50 படிகளாவது ஏறுபவர்களுக்கு 25% ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறைவு.
2.50 படிகள் என்பது தோராயமாக தினம் ஐந்து மாடி அல்லது பத்து படிகள் கொண்ட மாடியை ஐந்து முறை ஏறி இறங்குவதற்கு சமம் என்று கூறப்பிடுகிறது
3.சிலர் எந்த வித உடலுழைப்புமில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உண்டு .ஆனால் இடைவிடாத உடற்பயிற்சி மூலம் உடலில் உள்ள ஆற்றலை செலவழிப்பவர்களும் இதயநோய்களில் இருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.
4.வாரம் 2000 கலோரிகளுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் எரிப்பவர்களுக்கு இதய நோய் வாய்ப்பு குறைவு .
5. 2000 கலோரிகளை எரிக்க வாரம் ஒரு வாரத்திற்கு 32 கி.மீ நடக்கவேண்டும். இப்படி அட்டவணை போட்டு நடந்தால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்கலாம்
6.மேலும் இதற்கு காரணம் அதிக மன உளைச்சல் ,ஸ்ட்ரெஸ் ,உடற்பயிற்சியின்மை ,பரம்பரை போன்றவை காரணம்