வயிறு குலுங்க சிரித்தால் எந்த நோய் உங்களை விட்டு விலகும் தெரியுமா ?

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

பொதுவாக டென்ஸனால் பலருக்கும் மன அழுத்தம் உண்டாகிறது .இந்த ஸ்ட்ரெஸ்ஸை போக்க யோகா தியானம் வகுப்புகள் நடக்கின்றன .இருந்தாலும் அதை குறைக்க பலர் பலவிதமான முயற்சியில் ஈடு படுகின்றனர் .எப்படி இயற்கையாய் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1. ஒய்வு ,உறக்கம் ,சுடுநீரில் குளித்தல் ,சத்தான பழங்களை உண்பது போன்றவை ஒரு வகையில் மன அழுத்தத்தை குறைக்கும் .இதற்கு மேலும் சில வழிகளை பார்க்கலாம்

ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress
2.வீட்டில் இருந்து விலகி சற்று தூரம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் நடந்து செல்வதும் மன அழுத்தம் குறைய வழி செய்யும் ஒரு யுக்தி
3.மன அழுத்தத்தை குறைக்க செருப்பு இல்லாமல்  வெறும் கால்களால் தெருவில் நடந்து வந்தால் போதும் உடனடியாக மனம் உற்சாகமாகும்
4.தினம் காலை, மாலை வேளையில் வீசும் இதமான காற்று உங்கள் முகத்தில் மென்மையாகப்படுமாறு வாக்கிங்கை மேற்கொண்டால்  உங்களிடம் உள்ள டென்ஷன் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
5.மன அழுத்தம் உண்டாக காரணம்  கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன் உங்கள் உடலில் அதிகமாகச் சுரப் பதுதான் . இதை கட்டு படுத்த சில பயிற்சிகள் உள்ளன
6.காமெடியாக பேசி வயிறு குலுங்கச் சிரித்து  பாருங்கள் கார்ட்டிசால் சுரப்பு குறைந்து, மூளையைத் தூண்டுவதற்கு உதவும் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். என்று பல மன நல வல்லுநர்கள் கூறுகின்றனர்