.காய்ச்சல் உள்ளவர்களுக்கு இந்த இலையை ரசம் வச்சி கொடுங்க

 
koththamalli seeds

பொதுவாக கடைகளில் கொசுறாக கொடுக்கப்படும் கொத்தமல்லி  இலையில் ஏராளமான வைட்டமின்களும் ,கனிம பொருட்களும் அடங்கியுள்ளன .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.கொத்தமல்லி  இலை செரிமான சக்தி கொடுக்கும் .

koththamalli
2.மேலும் புளித்த ஏப்பம் முதல் நெஞ்செரிச்சல் வரை குணமாக்கும் .
3.மேலும் வாய்ப்புண் முதல் கண் ஆரோக்கியம் வரை காக்கும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
4.பித்தத்தால் ஏற்படும் தலைவலி மற்றும் வாந்தி நீங்க சிறிதளவு கொத்தமல்லி விதையுடன் இஞ்சி, காய்ந்த திராட்சை பழம், சிறிதளவு வெல்லம் சேர்த்து அவித்து  குடித்தால் தலைவலி மற்றும் வாந்தி  போன்றவை உடனே நீங்கி நம் ஆரோக்கியம் பலம் பெரும்  
5.மேலும் சுக்குடன் மல்லி  சேர்த்து அரைத்து காபி தூளாகவும் பயன்படுத்தி ஆரோக்கியமான காபி குடிக்கலாம்
6.அஜீரணம், வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிற்றுப் புண்  மற்றும் உணவு விரைவில் செரிமானமாக கொத்தமல்லி இலையை ரசம் மற்றும் துவையல் செய்து சாப்பிட வேண்டும்.
7.கொத்தமல்லி இலை   கொழுப்பை உடைத்து கரைக்க உதவுவதால் உடல் பருமன் குறைகிறது.
8.காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி இலையை சேர்த்து ரசம் செய்து கொடுக்க உடலுக்கு புது தெம்பை அளிக்கும்.