இப்படி மதுவை குடித்தால் மறுநாள் ஹாங்கோவர் ஆகாமல் தப்பிக்கலாம்
பொதுவாக பலர் குடித்து விட்டு ,மறுநாள் ஹாங்கோவர் ஆகி விடுகின்றனர் .இதனால் தலைவலி ,உடல் சோர்வு வயிறு வலி போன்ற தொல்லைகளை அனுபவிக்கின்றனர் .இந்த ஹாங்கோவரிலிருந்து எப்படி நம்மை தற்காத்து கொள்ளலாம் என்று இங்கே கூறியுள்ளோம் படித்து பயன் பெறுங்கள் .
1.சிலர் மதுவை அளவில்லாமல் குடிப்பர் ,இப்படி மது அதிகம் அருந்துவதால் ஹேங்கோவர் எனப்படும் பாதிப்பு ஏற்படலாம்.
2.ஹேங்கோவரை தடுக்க ஆண்கள் ஒரு நாளைக்கு 2 யூனிட்டுகள், பெண்கள் 1 யூனிட்டுக்கு மேல் மது அருந்தக்கூடாது. மீறி அருந்தினால் தொல்லை உண்டாகும்
3.சிலருக்கு மது குடிக்கும்போது தலை வலிக்கும் .மது அருந்தும்போது தலைவலி ஏற்பட்டால் மதுவை தவிர்க்க வேண்டும்.
4.மேலும் ஹேங்கோவரில் காபி, டீ குடித்தல் மேலும் பாதிப்பை உண்டாக்கும்
5.ஹேங்கோவரை தடுக்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
6.ஹேங்கோவர் இருந்தால் வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது.