வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது எந்த நோயை விரட்டும் தெரியுமா ?

 
neem

பொதுவாக  சர்க்கரை நோய்க்கு இயற்கை வைத்தியத்தில் பல்வேறு மூலிகைகள் உதவுகின்றன .அந்த வகையில் எந்த பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் சுகரை கட்டுக்குள் வைக்கலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம்  

1.சீந்தில் கொடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  மற்றும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
2.மேலும் இந்த சீந்தில் கொடி  இருமல் சளிக்கு நல்லது மற்றும் கல்லீரலை பாதுகாக்கிறது.
3.நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் இரண்டும் உடலுக்கு நன்மை பயக்கும், அதே நேரத்தில் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொள்ளும் போது  சிறந்த நீரிழிவு நோயை எதிர்க்கும் கலவையாகிறது. .

sugar
4. உலர்ந்த இஞ்சி மற்றும்  கருப்பு மிளகு  இவை இரண்டும் நீரிழிவு எதிர்ப்பு மசாலாப் பொருட்களாகக் இருக்கின்றன .
5. வேப்பிலை  போல, செம்பருத்தியின் நன்மைகள் பற்றியும் அறிந்திருக்கலாம்.   
6.இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.  
7.இதேபோல்,  வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது முதல் வேப்பம்பூ மாத்திரைகள் சாப்பிடுவது மூலம் நிறைய பயன்களை நாம் அடையலாம்.
8.மேலும்   அஸ்வகந்தாவை பயன்படுத்தி, நீங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கலாம், சோர்வைக் குறைக்கலாம், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம் மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம்.  
9. சர்க்கரை நோய்க்கு உதவ  கறிவேப்பிலை, முருங்கை, இலவங்கப்பட்டை, வெந்தயம் போன்றவை உள்ளன . இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.