நைட்ல நான் வெஜ் கட்டு கட்டுன்னு கட்டுறவங்களை இந்த நோயெல்லாம் காட்டு காட்டுனு காட்டுமாம்

 
nonveg

அசைவ உணவு (Non-vegetarian) என்பது விலங்குகளின் இறைச்சியை கொண்ட உணவாகும். அது பெரும்பாலும் வீட்டுவளர்ப்பு விலங்காகவே இருக்கும். நான் வெஜ் (non-veg) என்பது ஒரு இந்திய ஆங்கில வார்த்தையாகும், இது மாமிச உணவைக் குறிக்கப் பயன்படுகிறது, மேலும் சைவ உணவு உண்பவர் அல்லாத ஒரு நபருக்கு, அதாவது இறைச்சியை உட்கொள்ளும் ஒருவர், குறிப்பாக புரதத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கிறார்.இந்தியாவில் கோழிக் கறி, மாட்டுக் கறி, ஆட்டுக் கறி, பன்றிக் கறி மற்றும் மீன் போன்றவை உண்ணுகின்றனர்.
உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்கும்போது, 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் செரித்துவிடும். ஆனால், அசைவு உணவு செரிமானம் அடைய சுமார் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் வரை ஆகும். எனவே, அசைவ உணவுகளை இரவு வேளையில் சாப்பிடக் கூடாது. செரிமானப் பிரச்னையால் பித்தப்பையில் கல் உருவாகும்.


 

விலங்குகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை உற்பத்தி செய்யும் பொருட்களால் உணவாகின்றன. உதாரணமாக மாமிச உணவானது விலங்குகளின் தசைகளிலிருந்து அல்லது அவற்றின் உறுப்புகளிலிருந்து நேரடியாக உணவாகக் கிடைக்கிறது.

பாலூட்டிகளின் சுரப்பிகளிலிருந்து பால் உள்ளிட்ட சிலவகை உணவுகள் விலங்குகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலில் இருந்து பல்வேறு வகையான பால் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பறவைகளால் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும் உணவுப்பொருட்களாகப் பயன்படுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேன் ஒரு நல்ல மருந்துணவாகவும் பயன்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விலங்குகளின் இரத்தமும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் அதிகமாக சாப்பிடும்போது, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், சீரற்ற இதய துடிப்பு, அதிக உடல் பருமன் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும்.

இதயத்துக்கு செல்லும் குழாயில் கொழுப்பு படியும். அதிக ரத்த அழுத்தம் ஏற்படும். பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும்.

பெண்குழந்தைகள் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், சிறு வயதிலேயே பருவம் எய்தும் நிலை உண்டாகும்.

 அசைவ உணவுகளை இரவு வேளையில் சாப்பிடக் கூடாது. செரிமானப் பிரச்னையால் பித்தப்பையில் கல் உருவாகும்.

சிலர் மது அருந்திவிட்டு, அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால், உடலில் கொழுப்பு சேர்ந்து, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மேலும் பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு.