பாதாம் பிசினை பாலில் கலந்து சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?
பொதுவாக நம் உடல் உடல் உஷ்ணமாகிவிட்டால் வயிற்று வலி ,கண் எரிச்சல் ,உடல் எரிச்சல் மல சிக்கல் வரை உண்டாகும் .இந்த பிரச்சினைகளுக்கு பாதாம் பிசின் பயன் படும் .இது பாதாம் மரத்தலிருந்து எடுக்கப்படும் ஒரு பிசின் ஆகும் .இதை நம்மூர் ஜிகிர்தண்டா முதல் சர்பத் வரை போட்டு விற்கிறார்கள் .இந்த பாதாம் பிசினை இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அப்படியே சாப்பிட்டால் உடல் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் குணமாகி உடல் குளிர்ச்சியாகிவிடும் .இதை கோடை காலத்தில் அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு
பாதாம் பிசின் ஒரு அற்புதமான இயற்கை உடல் குளிரூட்டியாகும், .
:
பாதாம் பிசின் ஒரு அற்புதமான ஆக்ஸிஜனேற்றியாகும்.மேலும் எப்போதும் இளமையாக இருக்க விரும்புவோர் இதை தொடர்ந்து உட்கொள்ளும்போது இதில் உள்ள தாதுக்களும் புரோட்டீனும் முன்கூட்டிய முதுமை (வயதானவர்களை போல்) ஏற்படுவதை தள்ளி போடுகிறது . .
பல ஆண்கள் இன்று சந்திக்கும் விந்தணு குறைபாடு முதல் மலட்டு தன்மை வரை இந்த பாதாம் பிசின் தீர்த்து வைக்கும்
. அப்படிப்பட்ட ஆண்கள் தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்பட்டு . மலட்டுத்தன்மை வராமல் பாதுகாக்கும்