தினமும் புழுங்கல் அரிசி கஞ்சி குடித்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
rise kanji

 

இன்றைக்கு பலரும் வேளை தவறி உண்ணும் பழக்கத்தாலும் ,அதிகமாக காரமான உணவாலும்  அல்சர் நோயால் அவதியுற்று வருகிறார்கள்

இந்த கொடுமையான அல்சர் முற்றிலும் குணமாக , இதோ சில  வீட்டு வைத்தியம் உங்களுக்காக ..

ulcer health tips

தினமும் சமையல் செய்து கிடைக்கும்  புழுங்கல் அரிசி கஞ்சி ஒரு டம்ளர் அருந்தி வர, அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும் என்று பாட்டி வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது

 மணத்தக்காளி கீரை அல்சரை விரட்டும் ஆற்றல் கொண்டது .இந்த கீரையை  சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் , அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை அடிச்சி விரட்ட முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் .

பச்சை வாழைப்பழத்துக்கும் வயிற்று புண்ணை சரி செய்யும் ஆற்றல் உண்டு .அதனால் அதை  தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோய் நம் குடலை விட்டு ஓடி விடும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர் .

தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை நம் உடலை விட்டும் குடலை விட்டும் ஓடி விடும் .

 ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்து நம் குடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்

நன்றாக பழுத்த பாகற்காயை தினமும் சமைத்து உண்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிப்பதோடு அல்சரையும் அடியோடு அழித்து நமக்கு ஆரோக்கியம் தரும் என்பதில் ஐயமில்லை

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, அல்சரை சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து, நம்மை அல்சர் பேஷண்டிலிருந்து விடுவித்து ஆரோக்கியமான மனிதராக மாற்றி விடும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.