குழந்தைக்கு பவுடர் போடுவதால் உண்டாகும் பயங்கர விளைவுகள்

பொதுவாக பவுடர் போடுவதால் குழந்தைக்கு பல உடல் கோளாறுகள் உண்டாவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது . .அதனால் இப்படி பவுடர் போடுவதால் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் காணலாம்
1.அமெரிக்கக் குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் (American Academy of pediatrics), குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்துவது நல்லதல்ல என்றும் இது பலவித நோய்களை உண்டாக்கும் என்று கூறியுள்ளது.
2.பவுடரில் உள்ள மிகவும் நுண்ணிய துகள்கள், சுவாசக் கோளாறுகளையும், ஆபத்தான நுரையீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று அந்த நிறுவனத்தினர் என்கின்றனர்.
3.பவுடரின் நுண்ணிய துகள்கள் சுவாசம் வழியாக, நுரையீரலைச் சென்று சேர்ந்து பல ஆரோக்கிய கேட்டை உண்டாக்கும் .
4. குறைமாதக் குழந்தைகள், பிறவி இதயக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு, மிகவும் குறைந்த அளவு பவுடர் கூட நுரையீரலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கலாம் என்று அந்த ஆய்வு குழுவினர் கூறுகின்றனர் .
5.சில பவுடர்கள் மூலம் புற்று நோய் அபாயம் கூட அந்த குழந்தைக்கு இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன